தினசரி வேலை

விடுப்புக்கு விண்ணப்பியுங்கள்

உங்கள் விடுப்பு இருப்பைப் பாருங்கள், விடுப்புக் கோரிக்கையைச் சமர்ப்பியுங்கள், அதன் நிலையைப் பின்தொடருங்கள்.

உங்கள் இருப்பைப் பாருங்கள்

இடது மெனுவில் Leaves (விடுப்புகள்) கிளிக் செய்யுங்கள். Members உடனே My Leave Balances பார்ப்பார்கள். மேனேஜர்களும் அட்மின்களும் முதலில் My leaves டேபைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கார்டும் மீதமுள்ள நாட்களைப் பெரிய எழுத்தில் காட்டும். அதன் கீழே “X of Y days used” என்று இருக்கும்.

விடுப்பு இருப்புக் கார்டுகள், Leave History அட்டவணை மற்றும் Apply Leave பட்டனுடன் கூடிய Leave Management பக்கம்.

“Leave balance not configured yet” என்று பார்த்தால், உங்கள் அட்மின் இன்னும் விடுப்பு வகைகளை அமைக்கவில்லை. Casual, Sick, Earned, Maternity அல்லது Paternity என்ற சொற்கள் பெயரில் உள்ள விடுப்பு வகைகளுக்கு மட்டுமே இருப்புக் கார்டுகள் தெரியும்.

விடுப்புக்கு விண்ணப்பியுங்கள்

  1. Leaves பக்கத்தில் Apply Leave (விடுப்புக்கு விண்ணப்பி) கிளிக் செய்யுங்கள்.
  2. ஒரு Leave Type (விடுப்பு வகை) தேர்ந்தெடுங்கள்.
  3. Start Date மற்றும் End Date தேர்ந்தெடுங்கள். தொடக்கத் தேதி கடந்த காலத்தில் இருக்கக்கூடாது.
  4. ஒரு Reason (காரணம்) டைப் செய்யுங்கள், உதாரணமாக “மதுரையில் குடும்ப விழா”.
  5. Submit Request கிளிக் செய்யுங்கள்.

படிவத்தில் “No leave types have been configured for your workspace.” என்று காட்டினால், விடுப்பு வகைகளைச் சேர்க்கும்படி உங்கள் அட்மினிடம் கேளுங்கள்.

விண்ணப்பித்த பிறகு

  • உங்கள் கோரிக்கை Leave History-இல் PENDING நிலையுடன் தெரியும்.
  • Workclave அதை ஒரு ரிவ்யூவருக்கு அனுப்பும். பொதுவாக உங்கள் மேனேஜர் அல்லது ஒரு workspace அட்மின்.
  • உங்களுக்கு Leave approved அல்லது Leave rejected அறிவிப்பு வரும். நிலை APPROVED அல்லது REJECTED ஆக மாறும்.

நாட்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன

கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்ததும், தொடக்கத் தேதி முதல் முடிவுத் தேதி வரையிலான ஒவ்வொரு காலண்டர் நாளும் உங்கள் இருப்பிலிருந்து கழிக்கப்படும். இடையில் வரும் வார இறுதி நாட்களும் இதில் அடங்கும். உதாரணமாக, வெள்ளி முதல் திங்கள் வரை என்றால் 4 நாட்கள் ஆகும்.

சம்பளக் கணக்கீட்டில், ஒப்புதல் பெற்ற விடுப்பு வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை, விடுமுறை நாட்கள் தவிர) மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பாகக் கணக்கிடப்படும்.

வார இறுதியில் இருப்பு கழிக்கப்படாமல் இருக்க, தனித்தனி வரம்புகளுக்கு விண்ணப்பியுங்கள். உதாரணமாக வெள்ளி முதல் வெள்ளி, திங்கள் முதல் திங்கள்.

கோரிக்கையை மாற்ற அல்லது ரத்து செய்ய

ரத்து செய்யும் பட்டன் இல்லை. கோரிக்கையை நிராகரிக்கும்படி உங்கள் ரிவ்யூவரிடம் கேளுங்கள், பிறகு புதிய கோரிக்கையைச் சமர்ப்பியுங்கள்.

ஸ்கிரீன்ஷாட்கள் ஆங்கில இடைமுகத்தைக் காட்டுகின்றன.

தொடர்புடைய கட்டுரைகள்